தசை பிடிப்பு, தண்டுவட வட்டுகள் விலகியிருப்பது, நரம்புகள் மீதான அழுத்தம் என பல காரணங்களினால் இடுப்பில் வலியை உணரத் தலைப்படுவோம். இந்த வரிசையில் சியாட்டிகாவும் ஒன்று. இயற்கை யோகா மருத்துவ முறைகளின் வாயிலாக இந்த சியாட்டிகாவினால் ஏற்படும் வலிக்கு நிவாரணம் பெறுவது குறித்து இங்கே பார்க்கப்போகிறோ
மருத்துவ ஆலோசனை அவசியம்
இந்த யோகா மற்றும் பிராணாயாமம் பயிற்சிகளில் இறங்குவதற்கு முன்னர் இயற்கை யோகா மருத்துவரிடம் ஒரு முறை ஆலோசனை பெறுவது நல்லது. சியாட்டிக் வலியின் மூலம் குறித்தும், அதனை போக்குவதற்கான இதர வழிமுறைகள் குறித்தும், அவரவர் பாதிப்புக்கு ஏற்றபடி யோகா மற்றும் பிராணாயாமம் நிலைகள், அவற்றை எத்தனை முறை மேற்கொள்ளலாம் என்பது குறித்தும் தெளிவு பெற அவர் உதவுவார். அவசியமெனில் பரிந்துரைக்கேற்ப இடுப்புக் குளியல், தண்டுவடக் குளியல், வாழை இலைக் குளியல், மண் குளியல் போன்றவற்றை எடுத்துக்கொள்வதும் கூடுதல் நிவாரணத்துக்கு உதவும்.
(மருத்துவர் யோ.தீபா - கைநுட்பத்துறை தலைவர், அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை, சென்னை)
தொகுப்பு: எஸ்.எஸ்.லெனின்