நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைக்காக சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை மூன்று மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் நின்று மாணவர்கள் சேர்க்கை ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பள்ளியில் சேர்க்கை எண்ணிக்கை நிறைவடைந்த நிலையிலும், தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து கொள்ளுமாறு பெற்றோர்கள் ஆசிரியர்களை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
மாணவர்கள் சேர்க்கை நிறைவடைந்த நிலையிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து என்ன செய்வதென்று தெரியாமல் அரசு பள்ளி ஆசிரியர்கள் திணறி வருகின்றனர்.