17.74 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் புதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் மேக்ஸ் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவியின் லாங்-ரேஞ்ச் வேரியண்ட்டான இது, 2 சார்ஜிங் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த புதிய மாடலின் அதிகபட்ச டிரைவிங் ரேஞ்ச் 437 கிலோ மீட்டர்கள் என சான்றளிக்கப்பட்டுள்ளது. நெக்ஸான் எலெக்ட்ரிக் மேக்ஸ் காரின் பேட்டரியை ஒரு முறை மட்டும் சார்ஜ் செய்து, 300 கிலோ மீட்டர்கள் பயணிக்க நாங்கள் முயற்சி செய்தோம். விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள வீடியோவை பாருங்கள்