கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையின் இடதுபுற கால்வாயின் 4 வது பிரிவு சப்படி என்னும் கிராமத்திலிருந்து 5 கிராம ஏரிகளுக்கு நீர்க்கொண்டு செல்லும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் 60லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்க்கொள்ளப்படும் இந்த திட்ட பணிகளை அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், வேப்பனஹள்ளி எம்எல்ஏவுமான கே.பி.முனுசாமி பூஜையுடன் துவக்கி வைத்தார்...