ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த ஈராளச்சேரி பகுதியில் தனியார் தொழிற்சாலையின் கட்டுமான பணிகள் ஆனது நடைபெற்று வருகிறது இந்த தனியார் தொழிற்சாலையானது கிராமத்தில் விவசாய நிலம் அருகே கட்டப்பட்டு வருகிறது. இதனை அந்த கிராமத்து மக்களிடம் குடிநீர் சுத்திகரிப்பு ஆலை என முதலில் கூறிய தொழிற்சாலை நிர்வாகம் தற்போது கழிவுநீர் கால்வாயில் இருந்து சேகரிக்கப்பட்ட பாலிதீன் குப்பைகளை கொண்டு வந்து எரித்து அதிலிருந்து எண்ணெய் தயாரிக்கும் நிறுவனமாக செயல்பட உள்ளது இதுகுறித்து தொழிற்சாலை நிர்வாகத்திடம் கேட்டபோது ஆமாம் உங்களால் ஆனது செஞ்சிடுவேன் ஒன்னும் பண்ண முடியாது என்று கூறியுள்ளனர். இதனை அறிந்த கிராமத்து மக்கள் கழிவுநீர் கால்வாயில் இருந்து சேகரிக்கப்படும் பாலித்தீன் கழிவு குப்பைகள் விவசாய நிலத்தில் அதிகப்படியான வருவதாகவும் இதனை உண்டு ஆடு மாடுகள் உயிரிழப்பதாகவும் இரவு நேரங்களில் துர்நாற்றம் வீசுவதாகவும் சுத்தமான காற்றை சுவாசித்து சுகாதாரமான முறையில் வாழ்ந்து வந்த நாங்கள் தற்போது கடந்த இரு மாதங்களாக துர்நாற்றத்தை சுவாசித்து நிம்மதியாக உறங்க முடியாமல் தவித்து வருவதாக குற்றம்சாட்டினார்