காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் மற்றும் முத்தியால்பேட்டை கூட்டுறவு சங்கங்களின் கீழ் இயங்கும் 10 ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி விநியோகம் செய்ததாக விற்பனையாளர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் மண்டல இணை பதிவாளர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.