சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஊர்குளத்தான்பட்டியில் பெரிய கண்மாய் உள்ளது. சென்ற ஆண்டு நல்ல மழை பெய்து கண்மாய் நிரம்பியது. இதனால் இப்பகுதி விவசாயிகள் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு தங்களது விவசாய பணிகளை தொடர்ந்தனர். விவசாய பணி முடிந்ததும் எஞ்சியுள்ள கண்மாய் நீரில் ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி திருவிழா நடத்தப்படுவது வழக்கம். தற்போது விவசாய பணிகள் முடிவடைந்ததால் ஊர்குளத்தான்பட்டி பெரிய கண்மாயில் மீன்பிடி திருவிழா விமர்சையாக நடந்தது.