மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பலத்த காற்றுடன் ஒருமணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் மரங்கள் மின்கம்பங்கள் சாய்ந்தது. இந்நிலையில் மேலூர் அருகே கல்லம்பட்டி பகுதியில் உள்ள விளை நிலங்களில் சின்ன பளிங்கு கற்கள் அளவிற்கு ஆலங்கட்டி மழை விழுந்த காட்சியினை அப்பகுதியில் நின்றிருந்தவர்கள் தங்களுடைய செல்போனில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ள நிலையில் தற்போது வேகமாக பரவி வரும் நிலையில் அதனை பொதுமக்கள் வியப்பாக பார்த்து வருகின்றனர்...