கடலூர் வண்ணார பாளையம் கேகே நகர் பகுதியில் குளத்தை ஆக்கிரமித்து 17 வீடுகள் கட்டப்பட்டிருந்தன. அந்த வீடுகளை அகற்ற மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் வீடுகளை தானாக முன்வந்து அகற்றாத நிலையில் மாநகராட்சி ஆணையர் விஸ்வநாதன் உத்தரவின்படி மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு வீடுகளை ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து அகற்றினர். அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.