நாட்டிலுள்ள ஏழை எளிய மக்களுக்கும் வங்கிச் சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த வங்கிக் கணக்கைத் திறக்கும் பொதுமக்களுக்கு நிறைய சலுகைகள் கிடைக்கின்றன. மக்களுக்கான அரசின் நலத்திட்ட உதவிகள் இந்த வங்கிக் கணக்கிலேயே நேரடியாக செலுத்தப்படுவதால் இடைத்தரகு, சுரண்டல் போன்ற பிரச்சினைகள் குறைந்துள்ளன.