வழக்கத்தைவிட கோடை வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கும் வேளையில், பொதுமக்கள் நீண்ட அவதிக்கு உள்ளாகி வருகின்றனர், இந்நிலையில் இன்று ராமநாதபுரத்தில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக திடீரென கோடை மழை பெய்ததால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர், ராமநாதபுரம் நகர் பகுதிகள் மற்றும் பட்டினம்காத்தான், பாரதி நகர், அச்சுந்தன்வயல் போன்ற பகுதிகளில் திடீரென இடியுடன் கூடிய கோடை மழை பெய்ததால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாகினர், பொதுமக்கள் தொடர்ந்து கோடை வெயிலால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் திடீரென மழையின் காரணமாக குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டு வருகின்றனர்.