ஈரோடு மாவட்டம் பெருந்துறை வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் விஜயமங்கலத்தில் சுங்கச்சாவடி அமைந்து உள்ளது.சுங்கச்சாவடி வழியாக கோவையில் இருந்து சேலத்தை நோக்கி ஒரு கார் வந்தது. அந்த கார் சுங்கக் கட்டணம் செலுத்தாமல் செல்ல முயன்றது. உடனே சுங்கச் சாவடி ஊழியர் கார் செல்ல முடியாதபடி, காரின் குறுக்கே இரும்பு தடுப்பை போட்டார், இதனால் கோபம் அடைந்த காரில் வந்த கும்பலில் ஒருவர், தான் மனித உரிமைகள் கழகத்தின் தலைவர் என்றும், அதனால் தன்னுடைய காருக்கு வரி செலுத்த முடியாது என்றும் கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக அதே காரில் வந்த ஒரு பெண் உள்ளிட்ட மேலும் 4 பேரும் சுங்கச்சாவடி அலுவலரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.