சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அண்ணாசாலை வடக்குத் தெருவில் வசித்து வருபவர் கோவிந்தசாமி. குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார் வீடு பூட்டி இருப்பதை பார்த்த மர்ம நபர்கள் நேற்று இரவு பூட்டை உடைத்து வீட்டுக்குள் இருந்த ரூ 1 லட்சம் ரொக்கம் மற்றும் எல்.இ.டி டிவியை எடுத்துச்சென்றனர் பக்கத்து வீடான அருளானந்தம் இவர் முன்னாள் ராணுவ வீரர் இவரும் குடும்பத்துடன் வெளியூர் சென்ற நிலையில் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் வீட்டில் இருந்து ரூ.35 ஆயிரம் ரொக்கம் மற்றும் 2 வெள்ளி கொழுசுகள் வீட்டில் இருந்த எல்.இ.டி., டிவியை திருடி சென்றனர் காலையில் கதவில் பூட்டு உடைத்துத் இருப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் தேவகோட்டை நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பூட்டு உடைத்து சம்பந்தமாக தெருவில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து குற்றாவளிகளை தேடி வருகின்றனர் .