ராமேஸ்வரம் நகராட்சி 21 வார்டுகளில் 12 வார்டுகளில் திமுக கூட்டணியும், 6 வார்டுகளில் அதிமுக கூட்டணியும் , மீதமுள்ள மூன்று இடங்களில் சுயேட்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றன, வெற்றி பெற்ற அன்றே 3 சுயேச்சை வேட்பாளர்களும் திமுகவில் தஞ்சமடைந்தனர், அதனைத் தொடர்ந்து அடுத்த இரண்டு தினங்களில் மீண்டும் அதிமுகவிலிருந்து 3 உறுப்பினர்கள் விலகி திமுகவில் தஞ்சமடைந்தனர், இந்த நிலையில் திமுகவின் பலம் 12 லிருந்து 18 ஆக உயர்ந்தது, இதனை அடுத்து ராமேஸ்வரம் நகர்மன்றத் தலைவராக திமுகவை சேர்ந்தவரே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அனைவருக்கும் தெரியவந்தது, இதனை அடுத்து நேற்று தலைமையில் இருந்து ராமேஸ்வரம் நகர்மன்றத் தலைவர் வேட்பாளராக நாசர்கான் அறிவிக்கப்பட்டார்,