பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற தலைவருக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது.இதில் பல்லடம் 5 வார்டு உறுப்பினர் கவிதாமணி ராஜோந்திரன் தலைவர் பதவிக்காக மனு தாக்கல் செய்தார்.இந்நிலையில் 18 வார்டுகளில் வேறு யாரும் போட்டியிட மனு தாக்கல் செய்யவில்லை.அதனை தொடர்ந்து கவிதாமணி ராஜேந்திரகுமார் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக நகராட்சி ஆணையாளர் விநாயகம் அறிவித்தார்.