திமுகவின் வாக்கு வங்கி சிதறியதால் திமுக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது. இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சியில் தனித்தனியே களம் கண்ட அதிமுக மற்றும் அமமுக கட்சியினர் தலா 10 மற்றும் 5 இடங்கள் என 15 இடங்களை கைப்பற்றினர். மொத்தம் உள்ள 27 இடங்களில் திமுக கூட்டணி 11 இடமென எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் அதிமுக மற்றும் அமமுக கட்சியினர் கூட்டணி அமைத்து தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவியினை கைப்பற்றுகின்றனர்.