பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு; அன்பில் மகேஷ்!

Tamil Samayam 2022-03-02

Views 36

சென்னையில் நிருபர்களை சந்தித்த பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது: பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வானது ஏப்ரல் 25 முதல் மே 2ம் தேதி வரை நடக்கும். பிளஸ் 2 மாணவர்களுக்கு மே 5 முதல் மே 28 வரையிலும்,பிளஸ் 1 மாணவர்களுக்கு மே 9 முதல் மே 31 வரையிலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6 முதல் மே 30 வரையிலும் பொதுத்தேர்வு நடக்கும். பிளஸ் 2 மாணவர்களுக்கு ஜூன் 23லும் பிளஸ் 1க்கு ஜூன் 7லும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 17 ல் முடிவுகளை வெளியிட திட்டமிட்டுள்ளோம்.
பொதுத்தேர்வு முடிந்த பின்னர் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூன் 20ம் தேதியும், பிளஸ் 1 மாணவர்களுக்கு ஜூன் 24லும் வகுப்புகள் துவங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS