ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கண்ணன் என்பவரிடம் 7 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவலரிடம் ரசாயணம் தடவிய நோட்டுகளை கொடுத்துள்ளனர். இந்நிலையில் கண்ணனிடம் இருந்து 7 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது உதவி ஆய்வாளர் ராம்குமார் மற்றும் காவலர் வேணுகாந்தையும் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.