சிவகங்கை மாவட்டம் மானாமதுரை முன்னாள் எம்எல்ஏ தங்கமணியை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. மானாமதுரை சட்டமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினர் தங்கமணி (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), இவரது சொந்த ஊர் மானாமதுரை அருகே உள்ள கீழப்பசலை கிராமம், இவரது வயலில் விளைந்த நெல் மூட்டைகளை அருகில் உள்ள சோமாத்தூர் தற்காலிக அரசு நெல் கொள் முதல் மையத்திற்கு கொண்டு சென்றுள்ளார் அப்போது கீழப்பசலையை சேர்ந்த முருகன் என்பவர் தகராறு செய்துள்ளார். அருகில் இருந்தவர்கள் சமாதானம் செய்துள்ளனர், இதனை தொடர்ந்து தங்கமணி உறவினருடன் டூவீலரில் வந்து கொண்டிருந்த போது சோமாத்தூர் விலக்கு என்ற இடத்தில் முருகன் மேலும் சிலருடன் வழிமறித்து தாக்கியுள்ளனர்.