மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கலந்து கொண்டனர். 14 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோர் என இரு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் சிறுவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார். மாலையில் இறுதிப் போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.