சென்னை காமராஜர் சாலை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஒ பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் ஜெயலலிதா நினைவிட வளாகத்தில் அதிமுக சார்பில் அன்னதானம் நிகழ்ச்சியானது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, தூய்மைப் பணியாளர்கள் பொது மக்களுக்கு ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் அன்னதானம் வழங்கினார்.