சேலம் : கோவையில் குண்டர்களை வைத்து வன்முறையை தூண்டிவிட திமுக முயற்சிப்பதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கோவையில் குண்டர்களை வைத்து வன்முறையை தூண்டிவிட திமுக முயற்சிப்பதாக குற்றம் சாட்டிய எடப்பாடி பழனிச்சாமி கோவையில் தங்கியுள்ள சமூக விரோதிகளை உடனடியாக வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும் மக்களை சந்திக்க பயந்து முறைகேடாக தேர்தலில் வெற்றி பெற முதல்வர் ஸ்டாலின் முயற்சிப்பதாகவும், கோவையில் போலிஸ் துணையோடு தி.மு.க.வினர் பணம் வினியோகம் செய்து வருவதாகவும் சாடினார். எனவே ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பேட்டி - எடப்பாடி பழனிச்சாமி ( எதிர்கட்சி தலைவர் & முன்னாள் முதல்வர்)