மஸ்கட் நகரில் நடைபெற்று வரும் Quadrangular T20 தொடரில் நேபாள அணியுடன் அயர்லாந்து அணி மோதியது.
இந்த போட்டியின் 19வது ஓவரை நேபாள வீரர் கமால் சிங் (Kamal Singh) பந்து வீசினார். அவர் வீசிய பந்தை அயர்லாந்து வீரர் மார்க் அடையர் ( Mark Adair ) அடிக்க முயன்ற போது மட்டையில் பந்து சரியாக படவில்லை.
இதனால், சிங்கிள் எடுக்க ஓட முயன்ற போது, மற்றொரு முனையில் இருந்த பேட்ஸ்மேன் மெக்பிரையன் (Andy McBrine) கால் தடுக்கி கீழே விழுந்து விட்டார். இதற்கிடையே, விக்கெட் கீப்பர் ஆஷிப் ஷேக் (Md Aasif Sheikh ) கைக்கு கிடைத்த போதிலும், அவுட் ஆக்க சந்தர்ப்பம் இருந்தும், அயர்லாந்து வீரரை அவர் அவுட் ஆக்காமல் Sportsmanship உடன் நடந்து கொண்டார்.
இதை பார்த்த வர்ணணையாளர்கள், ஆஹா... இதுவல்லவோ ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் என்று ஆசிப் ஷேக்கை பாராட்டினர்.
இந்த போட்டியில் நேபாள அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருந்தாலும், தன் செய்கையால் உலக கிரிக்கெட் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார் நேபாள வீரர் ஆஷிப் ஷேக்.
மேலும் அவருக்கு 2022 ஆம் ஆண்டுக்கான spirit of Cricket விருது வழங்கப்படவும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
#Quadrangulart20series #Sportsmanship #nepal #wicketkeeper #MdAasifSheikh #newstn