#cithiraitv #கடந்த பட்ஜெட் போல பயனில்லாத பட்ஜெட் ? விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் அதிரடி |

chithiraitv 2022-01-17

Views 1

கடந்த பட்ஜெட்டுகளில் பயனில்லாத வெறும் பட்ஜெட்டாக அறிவித்த நிர்மலா சீதாராமன் வரும் பட்ஜெட்டிலாவது பெரும் பணக்காரர்களுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமான அரசாக இருப்பதை மாற்றி ஏழை எளிய மக்களுக்கும் சிறு குறு விவசாயிகளுக்கும், வியாபரிகளுக்கும் பயனளிக்கக்கூடிய வகையில் பட்ஜெட்டை வழங்குவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம் என விருதுநகரில் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பேட்டி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே படந்தால் சந்திப்பில் மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வரும் மேம்பாலம் குறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்ட விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தேசிய நெடுஞ்சாலையில் இடங்களை ஆய்வு மேற்கொண்டார். பொது செய்திகள் அவர்களை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர். விருதுநகர் மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றும் விதமாக மருத்துவ கல்லூரி கொண்டுவந்த மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கல்லூரிக்கு பெருந்தலைவர் காமராஜரின் பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதிமுகவை பொருத்தமட்டில் சேலத்திலும், தேனியிலும் நடைபெறுகிற கட்சியாக மாறிவிட்டது. கட்சியினரை உத்வேகப்படுத்தும் அதற்காக ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற தேவையில்லாத பிரச்சனையை உருவாக்க நினைக்கின்றனர். இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்று முடிந்து 2026 ல் தான் மறுசீரமைப்பு முடியும் அதன் பின்னர் தான் எந்த தேர்தல் எப்போது நடக்கும் என்பதை முடிவு செய்ய முடியும். 2024 நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் 2206 பின்னரே நாடாளுமன்றம் பாராளுமன்றம் உள்ளிட்ட மறுபரிசீலனை குறித்து தேர்தல் ஆணையமும் பாராளுமன்றமும் முடிவு செய்யும் அதற்கு முன்னர் அதிமுக இதுபோன்ற பகல் கனவு காண்கின்றனர். கடந்த கடந்த பட்ஜெட்டுகளில் பயனில்லாத வெறும் பட்ஜெட்டாக அறிவித்த நிர்மலா சீதாராமன் வரும் பட்ஜெட்டிலாவது பெரும் பணக்காரர்களுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமான அரசாக இருப்பதை மாற்றி ஏழை எளிய மக்களுக்கும் சிறு குறு விவசாயிகளுக்கும், வியாபரிகளுக்கும் பயனளிக்கக்கூடிய வகையில் பட்ஜெட்டை வழங்குவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம். தமிழகத்தில் நீட் தேர்வை பொருத்தமட்டில் பாஜகவை தவிர அதிமுக திமுக விடுதலைச் சிறுத்தைகள் கம்யூனிஸ்ட் கட்சிகள் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தமிழகத்தில் ஒரு மனதாக நீட்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று ஒற்றுமையுடன் இருக்கிறோம். சட்டப்பேரவையில் சட்ட மசோதாவை நிறைவேற்றி சட்டப்பேரவையில் சட்ட மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் செயல்படுத்த வேண்டும். ஆனால் மத்திய அரசு தமிழகத்தை பாராமுகமாகவே பார்த்து வருகிறது. தமிழர்களுடைய எண்ணங்களை கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய மத்திய அரசாக மாற வேண்டும் மோடி திருக்குறள் பாடுவதால் மட்டும் தமிழர்களை ஏமாற்ற முடியாது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குழந்தைகளின் நகைச் சுவையை உணர்ந்து கொள்ளக்கூடிய முடியாத கர்நாடக அதிகாரியாக வைத்திருக்கிறார். தமிழகத்தை பற்றி அவரது சிந்தனையில் இல்லை. முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி பொறுத்தவரை தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனையை அனுபவித்தே ஆகவேண்டும் அவர்செய்த தவறுகள் குறித்து தமிழக அரசு முறைப்படி நடவடிக்கை எடுக்கும். அவரை ஆதரித்து யார் குறிப்பிட்டாலும் அவர்களும் ஊழல்வாதிகளே என்றார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS