#ஆன்மீகம் #aanmeegam #இராசிபுரம் அடுத்த கோனேரிப்பட்டி காளியம்மன் கோவில் வளாகத்தில் பாதயாத்திரை செல்லும் காவடிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கோனேரிப்பட்டி பகுதியில் ஆண்டுதோறும் பழனி முருகனுக்கு காவடி தூக்கிச் செல்வது வழக்கம். அந்த வகையில் நாளை மறுநாள் காவடியாக பழனி முருகன் கோவிலுக்கு செல்கின்றனர். இதையொட்டி காவடிகளுக்கு சிறப்பு அபிஷேகம் இன்று நடந்தது. அதன்படி, கோனேரிப்பட்டி செட்டியண்ணன் தெருவில் உள்ள காளியம்மன் கோவில் வளாகத்தில் ஒம் முருகா பிரதர்ஸ், பழனிமலை முருகன் கோவில் அன்னதான மற்றும் பாதயாத்திரை குழு சார்பாக பழனிமலை முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக கொண்டு செல்லயிருக்கும் காவடிக்கு கணபதி ஹோமம், மற்றும் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
இதில் காவடி தூக்கிச்செல்லும் 20க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு காவடி ஆட்டம் ஆடி மகிழ்ந்தனர். இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது