#templevision #tv24 #மீனாட்சி அம்மன் ஆலய தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடக்கம் |

templevision24 2022-01-08

Views 0

#ஆன்மீகம் #aanmeegam #மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் தை தெப்பத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது . கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக விழாவில் பக்தர்கள் யாரும் பங்கேற்கவில்லை

வருடத்தின் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும் . மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை , ஆடி , ஆவணி , ஐப்பசி , தை , மாசி திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை . அந்த வகையில் இந்த ஆண்டு சிறப்பு பெற்ற தை தெப்பத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது . இவ்விழாவை முன்னிட்டு சாமி சன்னதி முன்பு அமையபெற்ற அலங்கரிக்கபட்ட கொடி மரத்தில் வேதமந்திரங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்கிட கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது . முன்னதாக கொடி மரம் அருகில் மீனாட்சி அம்மனும் . சுந்தரேசுவரரும் எழுந்தருளிய நிலையில் அவர்களுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை காட்டப்ட்டது . கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக கோயிலில் வெள்ளி சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் கொடியேற்ற விழாவில் பக்தர்கள் யாரும் பங்கேற்கவில்லை. விழாவையொட்டி காலை , இரவு என இரு வேளையும் சாமியும் , அம்மனும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சியும் , மேலும் , சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை போன்றவையும் , தெப்பத்திருவிழாவிற்கு முன்னோட்டமாக தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி வருகிற 16 - ந் தேதியும் , அதைத் தொடர்ந்து 17 - ந்தேதி சிந்தாமணியில் கதிரறுப்பு திருவிழாவும் ,, விழாவின் சிகர நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா வருகிற 18 - ந்தேதியும் நடைபெறுகிது . இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில் விழாக்கள் அனைத்தும் கோயில் வளாகத்தில் மட்டும் நடைபெறுமா என பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. மேலும் , தண்ணீர் நிரம்பியுள்ள பிரமாண்ட தெப்பத்தில் , வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்ட்ட தேரில் மீனாட்சி அம்மனும் , சுந்தரேசுவரரும் பவனி வரும் அழகை காண மதுரை மட்டுமல்லாது அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரகணக்கானோர் கூடும் நிலையில் இந்த அண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளு அமலில் உள்ள நிலையில் அம்மனை தரிசிக்க முடியுமா என்கிற கவலை மதுரை மக்களிடம் காணமுடிகிறது .

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS