பல்வேறு வழக்குகள் காரணமாக வெளிநாட்டுக்குத் தப்பிச்சென்ற நித்தியானந்தா, ‘கைலாசா’ என்கிற தேசத்தை நிர்மாணித்திருப்பதாகச் சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிவித்தார். தெற்கு அமெரிக்காவின் ஈகுவாடார் தீவு அருகே நிர்மாணிக்கப்பட்டிருக்கும் அந்தப் புதிய தேசத்தை இதுவரை உலக நாடுகள் ஏதும் அங்கீகரிக்க வில்லை. இந்தச் சூழலில், ஐ.நா-வின் சிறுபான்மையினர் விவகாரக் கவுன்சில் கூட்டத்தில் ‘கைலாசா’ பிரதிநிதியாக ஒருவர் பங்கேற்றிருப்பதும், இந்துச் சமூகத்தின் ஒற்றைப் பிரதிநிதியாகத் தன்னை நிலைநிறுத்த நித்தியானந்தா முயற்சி செய்வதும் பரபரப்பைப் பற்றவைத்திருக்கிறது. வரும் ஜனவரி 3-ம் தேதி, நித்தியானந்தாவின் பிறந்த நாள் கொண்டாடப்படவிருக்கும் நிலையில், ‘கைலாசா’ தொடர்பான சர்ச்சை மீண்டும் உயிர்பெற்றிருக்கிறது!