#MRVNEWS #திருவாரூரில் திமுக அரசை கண்டித்து மாவட்ட அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாத திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனடிப்படையில் திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் மாவட்ட செயலாளர் காமராஜ் தலைமையில் திருவாரூர் புதிய ரயில் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கழக அமைப்புச் செயலாளர்கள் கோபால் மற்றும் சிவா ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெட்ரோல் டீசல் மீதான மாநில வரியை உடனடியாக குறைக்கவும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு உதவிகள் வழங்கவும், வெள்ளத்தால் பயிர்களில் இழந்த விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 40 ஆயிரம் என உயர்த்தி வழங்கிடவும், மறு சாகுபடிக்கு என ஹெக்டேர் ஒன்றுக்கு 12 ஆயிரம் வழங்க வலியுறுத்தியும், பொங்கல் பண்டிகை கொண்டாட உதவும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 5000 பொங்கல் பரிசு தொகை வழங்க வலியுறுத்தியும், அம்மா கிளினிக்குகளை மூடுவதை கண்டித்தும், அரசின் அலட்சியத்தால் கடுமையாக உயர்ந்திருக்கும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை எதிர்த்தும்,தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்க கோரியும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் உணவுத் துறை அமைச்சருமான ஆர்.காமராஜ் பேசுகையில்,அரசு தேர்தல் நேரத்தில் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து வெற்றி பெற்று வந்த பிறகு எதையும் நிறைவேற்றவில்லை.குடும்ப தலைவிக்கு ஆயிரம் ரூபாய் தருவதாக அறிவித்தீர்களே.அந்த ஆயிரம் ரூபாய் பணம் எங்கே? அதைக் கேட்பதற்கு தான் இந்த ஆர்ப்பாட்டம், வந்தவுடன் நீட் தேர்வை இல்லை, நீட் தேர்வு ரத்து செய்யப்படும், நீட் தேர்வு இனி தமிழகத்தில் இல்லை என அறிவித்தீர்களே.எவ்வளவு பொய்யான வாக்குறுதி, முடியுமா முடிந்ததா, அவருக்கு பின்னால் எத்தனை சாவு, எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை, இதைக் கேட்பதற்காகத்தான் இந்த ஆர்ப்பாட்டம் என பேசினார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாப்பா சுப்ரமணியன்,மாவட்டக் கழக இணைச் செயலாளர் பாப்பாத்தி மணியன், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கலியபெருமாள்,ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.