#cithiraitv #10,12 ஆம் வகுப்புகளுக்கு கட்டாயம் பொதுத் தேர்வு நடைபெறும். திருவாரூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி.
திருவாரூர் மாவட்ட மைய நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர்பூண்டி கலைவாணன், பொது நூலக இயக்குனர் முனைவர் நாகராஜமுருகன், மாவட்ட நூலக அலுவலர் ஆண்டாள் மூன்றாம் நிலை நூலகர் அன்னப்பழம் உள்ளிட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர். ஆய்வின்போது திருவாரூர் மாவட்ட மைய நூலகம் சார்பில் அமைச்சரிடம் காவலாளி பணியமர்த்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மனு அளிக்கப்பட்டது. ஆய்வின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இந்த மாவட்ட மைய நூலகம் 10 ஆண்டுகளாக உரிய பராமரிப்பின்றி இருப்பதாக பத்திரிக்கை செய்தி வெளிவந்ததை அடுத்து முதல்வர் அறிவுறுத்தலின்படி திருவாரூர் மாவட்ட மைய நூலகத்தில் ஆய்வு மேற்கொள்ள வந்தேன். இந்த நூலகத்தில் நூல்கள் உள்கட்டமைப்பு வசதிகள் நன்றாக இருக்கிறது.ஆனால் கழிவறை உள்ளிட்ட தரைப்பகுதி டைல்ஸ் உடைந்து காணப்படுகிறது.அதை சரி செய்ய சொல்லியிருக்கிறேன்
உடனடியாக நிதி ஒதுக்கப்பட்டு திருவாரூர் மாவட்ட மைய நூலகம் சரி செய்யப்படும் என்றும், ஜனவரி மாதம் முதல் திருப்புதல் தேர்வுகள் மாணவர்களுக்கு நடைபெறும்,திருப்புதல் தேர்வு முடிந்த பிறகு ,பொதுதேர்வுகள் பத்தாம்வகுப்பு,பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக நடைபெறும்.ஒமிக்கிரான் குறித்து ஏற்கனவே ஊரடங்கு தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் பேசி உள்ளோம்.ஜனவரி 3 முதல் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சுழற்சிமுறை அல்லாமல் தொடர் வகுப்புகள் நடைபெறும் என கூட்டத்தில் பேசி இருந்தோம். ஆனால் ஒருவருக்கு தற்போது ஒமிக்ரான் வந்துள்ளது. எனவே வருகிற 25-ஆம் தேதி நடக்கக்கூடிய முதல்வர் தலைமையிலான கூட்டத்தில் இது குறித்து முடிவு செய்யப்படும் எனவும், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் தற்போது பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள்.மேலும் நிறைய ஆசிரியர்கள் தற்போது தேவைப்படுகிறது.மேலும் பணி மாறுதல்,பணி நிரவல்,நடத்தப்பட்டு எத்தனை ஆசிரியர்கள் தேவை என கணக்கெடுப்பு நடத்தப்பட்டு தேவைக்கேற்ப நியமிக்கப்படுவார்கள். உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக சிறப்பாக செயல்படுகிறார். அவர் அதை விட உயர்ந்த பதவிக்கு வரவேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். அவர் அமைச்சராக வந்தால் நல்லது என்று நாங்கள் நினைக்கிறோம் என்று கூறினார்.