நமது டிரைவ்ஸ்பார்க் குழு, பெங்களூருவைச் சேர்ந்த என்எம்டபிள்யூ உடன் இணைந்து, ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கை, மாடிஃபிகேஷன் செய்து வருவது நீங்கள் ஏற்கனவே அறிந்த ஒன்றே. இந்த திட்டம் குறித்த பல்வேறு தகவல்களை பாகங்களாக வெளியிட்டு வருகின்றோம்.
முதல் மூன்று பாகங்கள் ஏற்கனவே வெளியாகி விட்ட நிலையில், இப்போது, நான்காவது பாகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாகத்தில் பெரிய போர் கிட்-ஐக் கொண்ட ஹிமாலயன் இயங்க தயாராக இருக்கின்றது. மாற்றியமைத்தல் வாயிலாக பெரிய வால்வுகள், கேம்ஷாஃப்ட்கள் போன்றவை இப்பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், பைக் தற்போது முழுவதுமாக இயங்க தயாராக இருக்கின்றது.
பைக் முழுவதுமாக அசெம்பிள் செய்யப்பட்டு, தற்போது செல்லத் தயாராக இருப்பதால், வெளியே செல்வதற்கு முன் நாம் செய்ய வேண்டிய சில தயாரிப்புகள் மற்றும் நடைமுறைகள் உள்ளன. அவை என்ன? என்பதை இந்த அத்தியாயத்தின் வாயிலாகப் பார்க்கலாம் வாருங்கள்.
முந்தைய அத்தியாயங்கள்
அத்தியாயம் 1: https://youtu.be/apa-cunVL2w
அத்தியாயம் 2: https://youtu.be/yE0q1nDrpls
அத்தியாயம் 3: https://youtu.be/l1bmYWxQPGs
#RoyalEnfieldHimalayan #500ccHimalayan #HT500 #Modified