ஒரு கிலோ உப்பு ரூ 20 ஆயிரம், எலுமிச்சைப்பழங்கள் 6 ரூ 5001 மட்டும் தான் அம்மாடியோவ் தெய்வீக வழிபாட்டில் ஏலம் போன மங்களப்பொருட்களின் லிஸ்ட்

chithiraitv 2021-12-11

Views 49

உலகெங்கும் உள்ள நாட்டுக்கொட்டை நகரத்தார் இன மக்கள் கார்த்திகை பெரிய தீபம் நாள் முதல் ஒவ்வொரு நாளும், மா இழை எடுத்து 21 நாட்கள் கழித்து பிள்ளையார் நோன்பினை கடைபிடிப்பது வழக்கம், இந்நிலையில், கரூரில் உள்ள கரூர் நகரத்தார் சங்கம் சார்பில் பிள்ளையார் நோன்பு விழா 36 ம் ஆண்டாக நடைபெற்றது. கரூர் திண்ணப்பா கார்னர் பகுதியில் உள்ள அழகம்மை மஹாலில் வெள்ளிக்கிழமை மாலை புள்ளையார் துதிபாடலுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில், சிறுமிகள் பிள்ளையார் துதி பாடல்கள் பாடி மகிழ்ந்தனர். பின்னர் எரியும் சுவாலையுடன் கூடிய இலைகளை எடுத்து அதனை அப்படியே வாயிலிட்டு சாப்பிட்டு எரியும் சுடரும் இலை மாவிளக்கு எடுத்து சாப்பிட்டு நோன்பு களைந்தனர். சுமார் 400 க்கும் மேற்பட்டோரின் கூட்டு வழிபாட்டுடன் நிகழ்ச்சி தொடங்க, பின்னர், மங்கலப்பொருட்கள் ஏலம் விடப்பட்டது. இதில் எழுமிச்சை பழம், கற்கண்டு, சிறுவர், சிறுமிகளின் ஆடைகள், சிறுவர் பள்ளிக்கு செல்லும் போது பயன்படும் பேக், மஞ்சள், குங்குமம், உப்பு உள்ளிட்ட 21 பொருட்கள் ரூ 1 லட்சத்து 83 ஆயிரத்திற்கு ஏலம் போனது. எலுமிச்சை பழம் 6 பழங்கள் ரூ 5 ஆயிரத்திற்கும், உப்பு ஒரு கிலோ ரூ 20 ஆயிரத்திற்கும், மஞ்சள் ஒரு கிலோ ரூ 11 ஆயிரத்திற்கும், குங்குமம் 100 கிராம் ரூ 5 ஆயிரத்திற்கும், தேங்காய் ஒன்றும் ரூ 10 ஆயிரத்திற்கும் ஏலம் போனது. இந்த வித்யாச ஏல சம்பவம் இப்பகுதியில் பெரும் சுவாரஸ்யத்தினை ஏற்படுத்தியதோடு, இந்த மங்கல பொருட்களை ஏலத்திற்கு எடுத்து வீட்டில் வைத்தால் செல்வ செழிப்பு பெருகும் என்பது ஐதீகம் என்பதினால் போட்டி போட்டு கொண்டு ஏலப்பொருட்களை ஏலம் எடுத்து நகரத்தார் பெருமக்கள் வீட்டிற்கு சென்றனர். இந்நிகழ்ச்சிக்கு கரூர் நகரத்தார் சங்கத்தலைவர் சுப.செந்தில்நாதன் தலைமை வகிக்க, நகரத்தார் சங்க செயலாளர் மேலை.பழநியப்பன் ஏலம் விட்டார்.

பேட்டி : மேலை.பழநியப்பன் – செயலாளர் – கரூர் நகரத்தார் சங்கம்

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS