கரூர் பேருந்து நிலையம் டிராபிக் சிக்னலில் பிரேக் பிடிக்காத அரசு பேருந்து டூ விலர்கள் மீது ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்து இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த வாகன ஒட்டிகள் லேசான சிராய்ப்புகளுடன் உயிர்தப்பினர் – மயிரிழையில் உயிர்தப்பிய வாகன ஒட்டிகள் மற்றும் மக்களால் பரபரப்பு
கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியில் இன்று மதியம் 2.55 மணிக்கு கரூரிலிருந்து மாமரத்துப்பட்டிக்கு அரசு பேருந்து ஒன்று சென்ற போது, டிராபிக் சிக்னலில் ரெட் சிக்னல் விழுந்துள்ளது. உடனே அரசு பேருந்து ஒட்டுநர் பிரேக் பிடிக்க முயற்சித்துள்ளார். கொட்டும் மழையில் பிரேக் பிடிக்காமல் சென்று, சிக்னலை கடக்க முயற்சித்த இரண்டு இரண்டு சக்கர வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி அதன் மீது அரசு பேருந்து ஏறி நின்றது. இந்நிலையில், ஏற்கனவே கரூர் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் போராட்டம் நட்த்தாமல் இருக்க கடந்த சில தினங்களாக அங்கே போலீஸார் முகாமிட்டிருந்ததால், அங்கு போலீஸார் குவிந்து அந்த டிரைவரை இறங்க சொல்லி, காவல்துறையில் பணியாற்றும் டிரைவரை விட்டு கரூர் நகர காவல்நிலையத்திற்கு பேருந்தினை கொண்டு சென்று நிறுத்தினர். மேலும், மதியம் வேலையில், அதுவும் வாகன நெரிசல்கள் அதிகம் உள்ள நேரத்தில், ரெட் சிக்னல் விழுந்த போது அதை மதித்து பேருந்தினை நிறுத்த முயற்சித்த போது தான் இந்த விபத்து என்பதும், கரூர் பணிமணையிலிருந்து எப்போதும் டவுன்பஸ் மட்டுமே அந்த வழித்தடத்தில் செல்லும் பட்சத்தில், அந்த பேருந்தில் ஏதோ, பிராப்ளம் என்பதினால் அதற்கு பதிலாக மாற்றுப்பேருந்தினை அனுப்பியதால் தான் இந்த விபத்து என்கின்றனர் அந்த பேருந்தில் பயணம் செய்தவர்கள்., இந்நிலையில், காவல்துறையினரின் துரித நடவடிக்கையால் அந்த பேருந்திற்குள் கிடந்த இரண்டு இருசக்கர வாகனங்களை மீட்டு காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மயிரிழையில் உயிர்தப்பிய இருசக்கர வாகன ஒட்டிகள் 2 பேர் லேசான காயங்களுடன் கரூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு பேருந்தினை விட்டு இறங்கியதாலும், அங்கே இருந்த பொதுமக்கள் திடீரென்று கூடியதாலும் கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே சுமார் 30 நிமிடம் பரபரப்பு நீடித்தது மட்டுமில்லாமல் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது