Gestational Diabetes - பேறுகால சர்க்கரை நோய் - Family doctor
கர்ப்பிணிகளுக்கு வரக்கூடிய சர்க்கரை வியாதி ஆயுள் வரை இருக்காது. தற்காலிகமானது. ஆனால் இதை கட்டுக்குள் வைக்க
கர்ப்பக்காலம் என்பது அதிக கவனத்தோடு இருக்க வேண்டிய காலகட்டம். குறிப்பாக கர்ப்பக்காலத்தில் மட்டுமே வரக்கூடிய நோய்களிலிருந்து கவனமாக இருக்க வேண்டும்.
கர்ப்பக்காலத்தில் ரத்த சோகை, வைட்டமின் சத்து குறைபாடு, சிறுநீரக பிரச்சனை, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பிரச்சனைகள் வரக்கூடும். நீரிழிவு என்னும் சர்க்கரை நோய் உருவாக என்ன காரணம் இதன் அறிகுறிகள் என்னென்ன எப்படி இதை தவிர்ப்பது என்பதையெல்லாம் அறிந்துகொண்டால் பேறு காலத்தை ஆரோக்கியமாக கடக்கலாம் என்று அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள். தற்போது கர்ப்பிணிகள் சர்க்கரை நோயால் அவதிப்படுவது அதிகரித்து வரும் நிலையில் இது குறித்த விழிப்புணர்வை கொண்டிருந்தால் பேறுகாலத்தை இயல்பாக மகிழ்ச்சியாக கடக்கலாம்.
நீரிழிவு என்பது எப்படி பொதுவாக ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்து பாதிப்பை உண்டாக்குகிறதோ அதே போன்று கர்ப்பக்காலத்திலும் ரத்தத்தில் சர்க்கரை ( குளுக்கோஸ்) அளவை பாதிக்க செய்கிறது. கர்ப்பிணிகள் இதை அலட்சியம் செய்தால் இவை தீவிரமாகி வயிற்றில் வளரும் கருவின் வளர்ச்சியை பாதிக்க செய்யலாம். அதே நேரம் இவை பிரசவத்துக்கு பிறகு உடல் ஆரோக்கியம் மீண்டும் திரும்பலாம்.
கர்ப்பக் கால நீரிழிவை அலட்சியப்படுத்தினால் பிரசவத்தில் சிக்கலை உண்டாக்கும்...
ஆனாலும் கர்ப்பக்காலத்தில் டைப் 2 என்று சொல்லகூடிய நீரிழிவு கர்ப்பக்காலம் முழுவதும் தீவிரமாகாமல் கட்டுக்குள் இருந்தால் எப்போதும் உடல் ஆரோக்கியமாக இருக்கும். கர்ப்பக்காலம் முழுவதும் மருத்துவரின் ஆலோசனை பேரில் அவ்வபோது பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதே நேரம் நீரிழிவு அபாயம் இருந்தால் உரிய இடைவேளையில் பரிசோதனை செய்து கொள்வதும் கட்டுக்குள் வைப்பதும் அவசியம். கர்ப்பகால நீரிழிவு வருவதற்கு காரணம் என்ன என்பதை அறிவோம்.
காரணங்கள்
கணையத்தில் சுரக்கும் ஹார்மொன் இன்சுலின் ஆகும். உடலின் செரிமான கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகளை கட்டுப்படுத்தும் பணியை இன்சுலின் செய்கிறது. இது குளுக்கோஸை உடலுக்கு ஆற்றல் தரும் உயிர்சக்தியாக்க உதவுகிறது.
நஞ்சுக்கொடியிலிருக்கும் ஹார்மோன்கள் கர்ப்பக்காலத்தில் ரத்த குளுக்கோஸ் அளவை உறிஞ்சுவதை குறைக்கும் போது அதாவது ப்ரெஜெஸ்டிரான் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் இன்சுலினுக்கு எதிராக செயல்படும் போது அதிகப்படியான குளுக்கோஸ் தேங்கி கர்ப்பக்கால நீரிழிவை உண்டாக்குகிறது. இன்சுலின் குளுக்கோஸை சமன்படுத்த அதிகமாக சுரக்காமல் குறைபாடு உண்டாகும் போது கர்ப்பக்கால நீரிழிவு உண்டாகிறது.
பரம்பரை காரணமாக கர்ப்பிணிக்கு வரலாம். அதிக வயதுக்கு பிறகு கர்ப்பம் தரிப்பவர்கள், உடல் பருமனை கொண்டிருப்பவர்கள், கருவுற்ற நாள் முதல் உடல் உழைப்பில்லாமல் இருப்பவர்களுக்கு இந்த நிலை உண்டாகலாம்,.
அறிகுறிகள்
அதிக அளவு அறிகுறிகள் இருக்காது. அசாதாரணமாக அடிக்கடி தாகம் எடுப்பது உண்டு. கர்ப்ப காலத்தில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது உண்டு என்றாலும் நீரிழிவு இருந்தால் இன்னும் அதிகமாக இருக்கும். கடுமையான சோர்வு, கர்ப்பகால சோர்வை காட்டிலும் வேறு மாதிரி இருக்கலாம்.
சிறுநீர் பரிசோதனையிலும் சர்க்கரை இருக்கலாம். வெகு சிலருக்கு அடிக்கடி பசி உண்டாகும்.நீரிழிவுக்கு உண்டான அறிகுறிகள் எல்லாமே கர்ப்பத்தோடு தொடர்பு கொண்டவையே என்பதால் பெருமளவு கர்ப்பிணி பெண்கள் இதை நீரிழிவோடு தொடர்பு படுத்துவதில்லை. மருத்துவர் பரிசோதனைக்கு அறிவுறுத்தும் போது தான் தெரிகிறது.