தேர்தல் வரும்போது மட்டுமே அனைத்து அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் தேர்தல் விதிகளுக்குட்பட்டு கழட்டம்ப்படும் பின்னர் தேர்தல் விதிகள் தளர்ந்தவுடன் மீண்டும் அதே இடத்தில் கொடி பறக்கவிடுவது வழக்கம் . இந்நிலையில் சேலம் – மதுரை தேசிய நெடுஞ்சாலை 47ல் கரூர் அருகே உள்ள ஆட்டையாம்பரப்பு பகுதியில் கடந்த 10 வருடங்களாக பாமக கொடிக்கம்பம் சிமெண்ட் கட்டை கட்டி அதில் கொடிக்கம்பம் இருந்துவந்துள்ளது . இதற்க்கிடையில் நேற்று நள்ளிரவில் சில சமூக விரோதிகளால் பாமக கொடிக்கம்பம் வெட்டி சாய்க்கப்பட்டது. இதனை அறிந்த கரூர் தாந்தோன்றிமலை மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.ஆர்.ரவி அந்த தகவலை அலைப்பேசியில் சொன்னதையடுத்து கரூர் மாவட்ட மாநில துணை பொதுச்செயலாளர் பி.எம்.கே.பாஸ்கரன் தலைமையில் சம்பவ இடத்திற்க்கு சென்ற பாமகவினர் கொடிக்கம்பம் வெட்டி சாய்க்கப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்க்கொண்டு மீண்டும் அதே இடத்தில் பாமக கொடியை பறக்கவிட்டனர்..பின் இந்த குற்ற செயளில் ஈடுபட்ட சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்ய வலியுருத்தி தாந்தோன்றிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் அக்கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் பி.எம்.கே.பாஸ்கரன் கூறுகையில் நள்ளிரவில் பாமக கொடிக்கம்பம் வெட்டி சாய்த்த சமூக விரோதிகளை உடனடியாக காவல் துறை கைது செய்யாவிட்டால் காவல் நிலயை முற்றுகையிட்டப்படும் என எச்சரிக்கை விடுத்தார். இந்நிகழ்வில் பாமக மாவட்ட செயலாளார் சதீஸ்முதலியார், நகர தலைவர் ராஜேஸ்கண்ணா , நகர செயலாளர் சங்கர் , இளைஞரணி செயலாளர் கந்தன் , மாணவரணி செயலாளர் ஹரிராஜ் , வேலு , ராஜா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
பேட்டி - பி.எம்.கே.பாஸ்கரன் மாநில துணை பொதுச்செயலாளர் , கரூர்