பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக டெல்டா மாவட்டங்கள் அறிவித்துவிட்ட நிலையில் தொடர்ந்து மத்திய அரசு பராமரிப்பு என்ற பெயரில் டெல்டா பகுதிகளில் உள்ள நிலத்தை அழிக்க நினைப்தாக திரைப்பட இயக்குனர் களஞ்சியம் குற்றச்சாட்டினார்
தமிழ் சினிமாவில் முந்திரிக்காடு உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய நடிகரும் மற்றும் திரைப்பட இயக்குனருமான களஞ்சியம் தாய்நிலம் பாதுகாப்பு என்ற பேரமைப்பை இன்று மயிலாடுதுறையில் தொடங்கினார். தொடர்ந்து நிர்வாகிகளுடன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இயக்குனர் களஞ்சியம் இந்த தாய்நிலம் பாதுகாப்பு பேரமைப்பு டெல்டா மாவட்டங்களில் உள்ள பல்வேறு சிறு , குறு அமைப்புகளை ஒன்றிணைத்து அடுத்த மாதம் இறுதிக்குள் பெரிய அளவில் போராட்டம் ஒன்றினை நடத்த இருப்பதாக தெரிவித்தார். டெல்டா மாவட்டங்களை வேளாண் பாதுகாக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவித்த பிறகும் அங்குள்ள எண்ணெய் கிணறுகளை பராமரிப்பு செய்வதாகவும் விரிவாக்கம் செய்வதாகவும் மோடி மத்திய அரசும் , பன்னாட்டு நிறுவனங்களும் பயன்பாட்டிற்கு உதவாத நிலமாக மாற்றுகிறது என தெரிவித்தார். மேலும் இந்த டெல்டா பகுதிகளில் மீனவர்களுக்கு தொடர்ச்சியாக பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதாகவும் கண்டிப்பாக இதற்கெல்லாம் தீர்வு சொல்ல வேண்டிய நிலையில் தங்களது இயக்கம் இருப்பதாகவும் கூறினார்.
#chithiraitv #directorkalanjiyam #todaynews #Mayiladuthurai #kadaimugatheerthavaari #thulaurchavam #devotionalboomi #devotionalbuz #festivel2021 #templevision24 #templevision #Tv24 #today #chithiraitv #annamalainews24 #firstnews _tamil #Dotcom_tamil #Mrvnews #Newzbuz