பொதுப்பணித்துறை சொந்தமான ஏரிக்கு செல்லும் வாய்க்கால் தூர் வராததால் விளை நிலங்களில் தண்ணீர் புகுந்து நாசம் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த காவனூர் ஊராட்சியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சுமார் 100- ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது இந்த ஏரியில் நீர் வரும் வாய்க்கால் தூர்வாரப்படாமல் உள்ளதால் அருகிலுள்ள விளைநிலங்களில் தற்போது பெய்து வரும் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனை கண்டித்து பொதுமக்கள் பொதுப்பணித்துறை ஏரியை தூர்வார வேண்டும் அதற்கு செல்லும் வாய்க்காலையும் சரியாக தூர்வாரப்படாத தால் அப்பகுதியில் உள்ள விளைநிலங்களில் இடுப்பளவு தண்ணீர் சூழ்ந்துள்ளது இதனால் விவசாயிகள் நடவு செய்துள்ள 150 ஏக்கர் நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகி உள்ளது இதனால் அப்பகுதி விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர் மேலும் வட்டிக்கு பணம் வாங்கி நகை அடகு வைத்து விவசாயம் செய்து வருகிறோம் தற்போது இதுபோல் பருவ மழை பெய்து நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழகி உள்ளது தமிழக அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.