சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை அகரம் சந்திப்பு அருகே போக்குவரத்து தலைமை காவலர் செந்தில் குமார் பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது அருகில் இருந்த கோவிலுக்கு 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் சாமி கும்பிட வந்தார். அப்போது திடீரென விளக்கிலிருந்து தீயானது மூதாட்டியின் சேலையில் பிடித்தது. இதில் சேலையில் தீயானது பரவியது. இதைக் கண்ட தலைமை காவலர் செந்தில் குமார் உடனடியாக ஓடிவந்து மூதாட்டியின் சேலையில் பிடித்த தீ உடலுக்கு பரவாத படி கைகளால் தீயை அணைத்தார். மூதாட்டி காயமின்றி தப்பினார். இதில் காவலர் செந்தில் குமாருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
Traffic police constable in Chennai rescues elderly woman whose saree caught fire
#TrafficPolice
#Chennai
#Grandma