கரூர் நகரின் மையப்பகுதியில் மாரியம்மன் ஆலயத்தின் அருகே, தேர் வீதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்திவிநாயகர் ஆலயத்தில் நவராத்திரி தின கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்று வந்தது. நாள்தோறும் ஆலயத்தின் பரிவார தெய்வங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ விஷ்ணு துர்க்கைக்கு ஒவ்வொரு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் அருள் பெறுவார்கள், இதற்கான முழு ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினரும், ஆலய ஸ்தானிக்கர் வசந்த் சர்மா ஆகியோர் சிறப்பாக செய்து வந்தனர். சனிக்கிழமையான இன்று நவராத்திரி விழா தின நிறைவு நாளையொட்டி, அருள்மிகு ஸ்ரீ விஷ்ணு துர்க்கைக்கு அருள்மிகு ஸ்ரீ தனலெட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனைகள் காட்டப்பட்டும், லலிதா சகஸ்ஹரநாமம் மற்றும் குங்கும அர்ச்சனைகளும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆலய ஸ்தானிக்கர் வசந்த் சர்மா சிறப்பாக செய்திருந்ததோடு, விழாவின் இறுதி நாளை முன்னிட்டு கட்டளை தாரர்களுக்கு பரிவட்டத்துடன் கூடிய பிரசாதங்கள் வழங்கப்பட்டது.