#boominews | கரூர் மாவட்டத்தில் மட்டும் இதுவரை 1 லட்சம் கோடி குவாரிகளில் முறைகேடு முகிலன் ஆவேச பேட்டி

boominews 2021-08-27

Views 24

இன்று ஒரே நாளில் இரண்டு தாலுக்காக்களில் இரண்டு கல்குவாரிகள் துவக்க பொதுமக்களிடம் கருத்து கேட்பு நிகழ்ச்சி ! தொடர்ந்து மூன்று தினங்களில் 7 கல்குவாரிகள் திறப்பது குறித்து கருத்துகேட்பு நிகழ்ச்சி – அடுத்தடுத்து குற்றச்சாட்டுகளினால் மக்களின் வாழ்வாதாரத்தினை காப்பாற்ற திமுக தலைவர் தேர்தல் பரப்புரையில் கூறியது போல, அரசே கல்குவாரிகளை ஏற்று நடத்த கோரிக்கை – கரூர் மாவட்ட்த்தில் மட்டும் கிரானைட் குவாரிகளில் மட்டும் ரூ 70 ஆயிரம் கோடி முறைகேடு நடந்திருப்பதாகவும், மொத்தமாக சுமார் 400 கல்குவாரிகளில் மட்டும் சுமார் 1 லட்சம் கோடி முறைகேடு நடந்திருப்பதாகவும் குற்றச்சாட்டு

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்கா, பழையஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வீரியம்பாளையம் கிராமத்தில் உள்ள தனியார் நிறுவனம் பலவண்ண கிரானைட் சுரங்கம் அமைப்பதற்கான கருத்து கேட்பு நிகழ்ச்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத் அலிகான் தலைமை வகித்தார். மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிச்சந்திரன், கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மகுடேஸ்வரன் ஆகிய அதிகாரிகளும் மக்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன், சாமானிய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சண்முகம், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் விஜயன், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் செயல்பாட்டாளர் கண்ணன், லா பவுண்டேஷன் கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வாசுதேவன் ஆகியோர் இங்கு அமைய உள்ள பலவண்ண கிரானைட் சுரங்கம் அமைக்க கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். ஏனென்றால், விளைநிலங்களின் அருகே இந்த சுரங்கம் அமைய உள்ளதாகவும், குடிநீர் பஞ்சம் கடுமையாக நிலவும் என்றும் கருத்து தெரிவித்த்தோடு, கரூர் மாவட்டத்தில் ஏற்கனவே இயங்கி வரும் சுமார் 400 க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் எந்த ஒரு அரசு விதியையும் பின்பற்ற வில்லை என்றும், ஆகவே இரவு நேரங்களில் கூட இயங்குவதாகவும் குற்றம் சாட்டினார். இதனை தொடர்ந்து குளித்தலை அடுத்த தோகைமலையில் நடைபெற்ற ஊத்துப்பட்டி பகுதியில் புதிதாக அமைய உள்ள, புதிய கல்குவாரிக்கான பொதுமக்களின் கருத்து கேட்பு நிகழ்ச்சியில், பங்கேற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன், இங்கே அமைய உள்ள கல்குவாரியானது, பட்டா நிலத்தில் இருக்கின்றது. ஆனால், ஒப்பந்தம் அடிப்படையில் என்று, பவர்பாயிண்ட் பிரசண்டேஷனில் காண்பிக்கப்படுவது முற்றிலும் நம்பகத்தன்மை இல்லாததை ஏற்படுத்துகின்றது. ஆகையால் முறையான அனுமதி கிடைப்பதற்கு முன்னர், ஏற்கனவே அனுமதி கொடுத்த கிரானைட் மற்றும் கல்குவாரிகள் முழுமையான அரசு விதிகளை கடைபிடித்தால் மட்டுமே புதிய குவாரிகளுக்கு அனுமதி கொடுக்க வேண்டுமென்றும், இயற்கை சூழல் மாசுபடுவதற்கும், குடிநீர் பஞ்சம் ஏற்படாத வண்ணம் இப்பகுதி பொதுமக்களை அழைத்து அவர்களிடம் கருத்துகள் கேட்க வேண்டுமென்றும் முகிலன் கேட்டுக் கொண்டார். தற்போது நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டங்களை ரத்து செய்து விட்டு, புதியதாக கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்த வேண்டுமென்றும், அதில் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொள்ள வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS