காவேரி குரூப் கம்பெனி மற்றும் கோயம்புத்தூர் ஜூபிடர் லயன்ஸ் சங்கம் சார்பில் பசிப்பிணி போக்கும் நிகழ்வின் துவக்க விழா

Views 9

காவேரி குரூப் கம்பெனி மற்றும்
கோயம்புத்தூர் ஜூபிடர் லயன்ஸ் சங்கம் சார்பில் பசிப்பிணி போக்கும் நிகழ்வின் துவக்க விழா

பன்னாட்டு அரிமா சங்கங்கள் 324 டி கோயமுத்தூர் ஜூபிடர் லயன்ஸ் சங்கம் சார்பில் தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறும் பசிப்பிணி போக்கும் நிகழ்ச்சியின் துவக்க விழா இன்று காலை உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோயில் அருகில் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் மற்றும் சாலையோரம் மக்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோருக்கு உணவுகள் வழங்கப்பட்டது. இதனை கோவை மாவட்டம் 324 டி மாவட்ட ஆளுநர் கே குப்புசாமி அவர்கள் தலைமை தாங்கி பசிப்பிணி போக்கும் நிகழ்வினை துவக்கி வைத்தார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பன்னாட்டு அரிமா சங்கங்கள் 324 டி சார்பில் பல்வேறு சேவைகள் கோவை மாவட்டத்தில் செய்து வருகின்றனர். இதன் ஆண்டின் முக்கிய திட்டமாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குதல் குழந்தைகளுக்கான புற்றுநோய் விழிப்புணர்வு பிரசுரம் வழங்குதல் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் பசிப்பிணி போக்கும் திட்டங்களை செய்து வருகிறது. இன்று பசிப்பிணி போக்கும் நிகழ்வில் தொடர்ந்து 15 நாட்கள் பசிப்பிணி போக்கும் திட்டத்திற்கு உணவுகளை காவேரி குரூப் ஆப் கம்பெனி மற்றும் ஜூபிடர் லயன்ஸ் கிளப் இரண்டாம் துணைத் தலைவர் அரிமா வினோத் சிங் ரத்தோர் அவர்கள் வழங்கி வருகிறார். அவருக்கு அரிமா சங்கங்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பசிப்பிணி போக்குதல் திட்டத்தின் மாவட்ட தலைவர் அரிமா திருமலைசாமி, மண்டலத் தலைவர் அரிமா ராஜேஷ், வட்டார தலைவர் அரிமா உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கோயமுத்தூர் ஜூபிடர் அரிமா சங்க தலைவர் அரிமா பொன்னம்பலம் செயலாளர் தியாகராஜன் பொருளாளர் அரிமா சந்திரா ஜிஎஸ்டி ஒருங்கிணைப்பாளர் அரிமா செந்தில்குமார், குளோபல் மெம்பர்ஷிப் டெவலப்மெண்ட் அரிமா ராதிகா, உணவு திட்ட ஒருங்கிணைப்பாளர் மது மற்றும் காவிரி குரூப் ஆப் கம்பெனி குடும்பத்தார்கள் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS