செங்கத்தில் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் முக்கிய பொறுப்பாளர்கள் பங்கேற்பு

boominews 2021-08-11

Views 11

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியம் இந்து முன்னணி சார்பில் புதிய பேருந்து நிலையம் அருகில் அருள்மிகு தர்மராஜா திரெளபதி அம்மன் ஆலய சுற்றுப்புறம் அமைத்து தரக்கோரி தமிழக அரசை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொதுச் செயலாளர் வழக்கறிஞர் அருண் தலைமையில் நடைபெற்றது. செங்கம் ஒன்றிய தலைவர் சரவணன் அனைவரையும் வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் வேலூர் கோட்ட பொறுப்பாளர் மகேஷ். கலந்துகொண்டு பேசியதாவது திரெளபதி அம்மன் ஆலயத்திற்கு சுற்றுப்புற சுவரை அமைப்பது தொடர்பாக செங்கம் வட்டாட்சியர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. கோயில் ஆக்கிரமிப்புகளை உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் கோவிலை சுற்றி ஆக்கிரமிப்பாளர்களை தமிழக அரசு துரிதமாக செயல்பட்டு மீட்டுத்தர வேண்டும் என்று பேசினார் . மேலும்,பாரம்பரியம் தவறினால் இந்து முன்னணி தடுத்து நிறுத்தும் என்று பேசினார் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. நகர பொறுப்பாளர்கள் ராஜா, மோகன், பாண்டியன், மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS