#BOOMINEWS | டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தங்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் உருவத்தை 0.480 மி கிராம் செய்து அசத்தல் |

boominews 2021-08-11

Views 5

இராஜபாளையம் நகை தொழிலாளி. டோக்கியோ ஒலிம்பிக்கில் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் உருவத்தை 0.480 மில்லி கிராமில் செய்து அசத்தல்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தர்மாபுரம் தெருவை சேர்ந்த தங்க நகைகள் செய்யும் தொழிலாளி சமுத்திரக்கனி டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறியும் போட்டியில் கலந்துகொண்டு தங்கம் வென்று நம் இந்திய திருநாட்டிற்கு பெருமை சேர்த்த நீரஜ் சோப்ராவின் செயலை போற்றும் விதமாக நீரஜ் சோப்ரா ஈட்டி எறிவது போல் அவரது உருவத்தை 0.480 மில்லிகிராமில் தங்க முலாம் பூசப்பட்ட எடையில் வடிவமைத்து சமுத்திரகனி அசத்தியுள்ளார். இவர் இதற்கு முன்பாக 2007ஆம் ஆண்டு உலகக் கோப்பை யை0.44 மி.கிராம் ஹெல்மெட் ஒரு கிராம் 2010ஆம் ஆண்டு தேசியக்கொடி 0.020 மி. கிராம் 2014ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் மரம் 0.280 மி. கிராம் 2012ஆம் ஆண்டு மின்விசிறி ஒரு கிராம் மற்றும் டார்ச் லைட் 0.250 மி. கிராமில் செய்து பொதுமக்களின் பாராட்டை பெற்றுள்ளார். மேலும் இனி வரும் காலங்களில் உலக அளவில் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்லும் ஒவ்வொரு வீரர்களின்உருவத்தை இதேபோன்று வடிவமைக்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறினார்

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS