வில்லத்தனத்தில் மட்டுமல்லாமல் குணச்சித்திரத்திலும் கலக்கலாக நடிக்கக் கூடியவர் கிருத்திகா அண்ணாமலை. சன் டிவி-யில் ஒளிபரப்பான, ‘மெட்டி ஒலி’ சீரியலில் அறிமுகமான அவர், பல்வேறு சீரியல்களில் வில்லியாகவும், குணச்சித்திர வேடத்திலும் கலக்கினார். என்ன வேடம் கொடுத்தாலும் பிரமாதமாக நடிப்பவர் என்ற பெயர் கிருத்திகாவுக்கு உண்டு. ’ஆடுகிறான் கண்ணன்’, ’முந்தானை முடிச்சு’, ’கணவருக்காக’, ’வம்சம்’, ’செல்லமே’, ‘கண்மணி’, ‘சின்னத்தம்பி’ என்று கிருத்திகா நடித்த சீரியலின் பெயர்கள் நீண்டுக் கொண்டே போகிறது. நிறைய வில்லத் தனங்களுக்கு இடையே ரம்யா கிருஷ்ணனுடனான வம்சம் சீரியலில் பாஸிட்டிவ் கதாப்பாத்திரத்தில் நடித்தார். தற்போது சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டவர் இல்லம்’ சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார்.
Credits
Reports - S.Suryagomathi
Host - Sri Vidhya
Video - P.Rameshkannan
Edit - P.Senthilkuamr
Producer - Durai.Nagarajan