திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காமநாயக்கன் பாளையத்தில் அடுத்தடுத்த இரண்டு கார்கள் மீது லாரி ஒன்று பயங்கரமாக மோதியதில் 7 வயது குழந்தை உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குடிபோதையில் திருப்பூரில் இருந்து பொள்ளாச்சி நோக்கி லாரியை ஒட்யடி ஓட்டுநரால் இந்த கோரவிபத்து நடந்திருப்பதும் ஒரு குடும்பமே பலியாகி இருப்பது நெஞ்சை உருக்குவதாக உள்ளது.
இந்த கோரக்காட்சிகள் குடிபோதையில் வாகனம் ஓட்டுவரால் ஏற்படும் வலிகளை பிரதிபலிக்கிறது. குடிபோதையில வாகனம் ஓட்டுவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு இந்த விபத்து சோகமான உதாரணம்.