திடீரென பெரிய சத்தம், கூச்சல், பரபரப்பு! சாலை விபத்தில் சிக்கிய நபர் ரத்த வெள்ளத்தில் ஆம்புலன்ஸில் ஏற்றப்படுகிறார். மருத்துவமனையோ வெகு தூரம்! அவர் உயிர் பிழைப்பாரா என்ற கேள்வி நம் கண்முன்... விபத்தில் சிக்கியோரின் உயிரைக் காப்பாற்ற புதிய யுக்தியைக் கையாள்கிறது மீனாட்சி மிஷன் மருத்துவமனை!
இந்தியாவிலேயே முதன்முறையாக TelaDoc Robo-வை அறிமுகப்படுத்தியுள்ளது மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மதுரை. இதனால் ஆம்புலன்ஸிலேயே வீடியோ & ரோபோ வசதியுடன் நோயாளிக்கு வேண்டிய சிகிச்சையை வழங்க முடியும், உயிரிழப்பைத் தவிர்க்க முடியும்! இந்த நவீன கேமரா ரோபோ உலகின் 6 முன்னணி மருத்துவமனைகளில் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.