தந்தையின் பிரிவும், வறுமையின் பிடியும் அவர் கால்களைப் பிடித்து பின்னால் இழுத்தது. வாழ்க்கையின் இழுப்புக்கெல்லாம் ரப்பர் போல் வளைந்துகொடுத்தார். ஆனால், இவர் துவண்டுவிடவில்லை. ரப்பர்தான், எவ்வளவு பின்னால் இழுக்கிறோமோ அந்த அளவுக்கு முன்னால் செல்லுமே. இதோ... யாரும் தடுக்க முடியாதவகையில் முன்னால் பாய்ந்துகொண்டிருக்கிறார் தனலட்சுமி.