Reporter - அவள் விகடன் டீம்
Camera - சொ.பாலசுப்ரமணியன்
அன்றாட தேவைகளை அடிப்படை யாகக்கொண்டு, கிரியேட்டிவ் ஐடியாக்களோடு பிசினஸ் ஆரம்பித்தால் சக்சஸ் சாத்தியமே''
- நம்பிக்கை பொங்குகிறது மேரி ஷாம்லாவின் பேச்சில். ஐந்து வருடங்களுக்கு முன் ஆன்லைனில் ஒரு லட்சம் ரூபாய் முதலீட்டில் ஸ்நாக்ஸ் விற்பனை பிசினஸைத் தொடங்கிய இவரது மாத வருமானம் இன்று 25 லட்சம். தன்னுடைய பிசினஸ் வெற்றிக் கதையை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் ஷாம்லா.
“சொந்த ஊரு புதுக்கோட்டை. படிச்சது இன்ஜினீயரிங். அப்பா ராணுவத்தில் வேலை பார்த்தார். கட்டுப்பாடுகள் நிறைஞ்ச மிடில் கிளாஸ் குடும்பம். சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பிசினஸ் ஆலோசகராக என் கரியரைத் தொடங்கினேன். என் தம்பியும் அதே நிறுவனத்திலேயே வேலைக்குச் சேர்ந்தார். ரெண்டு பேரும் ஒண்ணா வீடு எடுத்துத் தங்கியிருந்தோம்.
சாப்பாடு இல்லைனாலும் மூணு வேளையும் ஸ்நாக்ஸ் சாப்பிட்டு தூங்குற டைப் நான். சென்னையில் ஸ்நாக்ஸ் தேடி கடைக்குப் போனால் பீட்சா, பர்கர், வெஜ் ரோல், பப்ஸ்னு வித்தியாசமான பண்டங்கள்தான் கிடைச்சது. அதையெல்லாம் சாப்பிடும்போது வயிறு நிறையும். ஆனா, ஆரோக்கியம் கேள்விக்குறிதான். பர்சனலா வயிற்றுவலி, வெயிட் போட்டதுனு நான் நிறைய பிரச்னைகளை எதிர்கொண்டேன். அதனால எனக்குத் தேவையான தின்பண்டங்களை நானே செய்ய ஆரம்பிச்சேன். அப்படிச் செய்த நட்ஸ் உருண்டைகளைச் சாப்பிட்டுட்டு, ‘இதை பிசினஸா ஆரம்பிச்சா சூப்பரா வியாபாரம் ஆகும்’னு சொன்னாரு தம்பியோட ஃபிரெண்ட். அந்த ஐடியா மனசுல பதியவே கொஞ்சம் அதிகமா நட்ஸ் லட்டுகள் தயார் செய்து அலுவலக நண்பர்களுக்குக் கொடுத் தேன். பாசிட்டிவ் கமென்ட்ஸ் வரவே அதையே பிசினஸாக மாற்றினோம். #womenmotivation #motivationstory #business