MEENAKSHI COLLEGE OF NURSING, MANGADU, CHENNAI - http://www.mcon.ac.in/
Reporter - ஆ.சாந்தி கணேஷ்
நான் வில்லிவாக்கம் வி 1 ஸ்டேஷன்ல காவலரா வேலைபார்க்கிறேன். நேத்திக்கு வேலை விஷயமா கோயம்பேடு மார்க்கெட் போயிருந்தப்போதான் அந்தச் சம்பவம் நடந்துச்சு. சுமை தூக்கிட்டு வந்த தொழிலாளி ஒருத்தர் வலிப்பு வந்து கீழே விழுந்துட்டாரு. வாயெல்லாம் நுரைதள்ளி, நாக்கைக் கடிச்சுக்கிட்டதால ரத்தம் வடியத் துடிச்சுக்கிட்டு இருந்தவருக்கு முதலுதவி செஞ்சுகிட்டே, மத்தவங்களை உதவிக்குக் கூப்பிட்டேன். மார்க்கெட்டுக்கு வந்தவங்க செல்போன்ல வீடியோ எடுக்கிறாங்களே தவிர, அந்த மனுஷனுக்கு உதவி செய்றதுக்கு யாருமே முன் வரலை. கொரோனா பரிசோதனை செய்யறதுக்காக அங்கிருந்த மருத்துவப் பணியாளர்கள் அந்தக் கூலித் தொழிலாளியைப் பரிசோதிச்சுப் பார்த்துட்டு, `பல்ஸ் ரேட் இறங்கிடுச்சுங்க. இனி ஒண்ணும் செய்ய முடியாது’ன்னு சொல்லிட்டாங்க. என்னால அதை ஏத்துக்கவே முடியலை. ஏன்னா, அந்த நிமிஷம் அவர் உயிரோடதான் இருந்தாரு. எப்படியாவது அவரைக் காப்பாத்திடணும்னு 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செஞ்சேன். #koyembedumarket
#inspirationstory #tamilnadupolice