Reporter - வெ.கௌசல்யா
`நாங்கள் மீட்கும்போது அந்தப் பெண் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, சுயநினைவற்று இருந்தார். அவர் அடைக்கப்பட்டிருந்த கழிப்பறை மிகவும் சிறியதாகவும், சுகாதாரமின்றியும் இருந்தது.’
ஹரியானா மாநிலம், பானிபட் மாவட்டத்திலுள்ள ரிஷிபூரில் வசித்துவரும் நரேஷ்குமார் என்பவர், தன்னுடைய மனைவியை (வயது 35) கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக தன் வீட்டுக் கழிப்பறையில் அடைத்து வைத்திருந்திருக்கிறார். இதையறிந்த மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையினர் புதன்கிழமை அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவ சிகிச்சை அளித்துவருகின்றனர்.