Reporter - செ.சல்மான் பாரிஸ்
Camera - ஈ.ஜெ.நந்தகுமார்
என் மனைவி இல்லாத வீட்ல என்னால இருக்கவே முடியல. எப்பவும் சிரிச்ச முகத்தோட நம்மள சுத்தி சுத்தி வந்தவங்க, திடீர்னு ஒருநாள் இல்லாமப் போறதை எப்படித் தாங்கிக்கிறது... இந்தச் சிலை, அந்த ஆற்றாமைக்கு ஓரளவுக்கு ஆறுதல் தருது...’’ - பிரிவுத் துயரில் பேசுகிறார் மதுரையைச் சேர்ந்த மூகாம்பிகை சேதுராமன்.
பிரியமானவர் இவ்வுலகைவிட்டுப் பிரியும்போது, அவர் நம்முடனேயே இருக்க வேண்டும் என்று ஏங்குவதும் அழுவதும் மனிதர்களின் அறிவை மீறிய ஓர் உணர்வு. அதற்கு வடிகால் தேடியிருக்கிறார், மதுரை மேலப்பொன்னகரத்தைச் சேர்ந்த 78 வயதுப் பெரியவர் மூகாம்பிகை சேதுராமன். சமீபத்தில் அவர் மனைவி பிச்சைமணி உடல்நலக் குறைவால் மறைந்தார். இத்தனை வருடங்களாகத் தன்னுடன் ஒட்டிவந்த இல்லற உறவை மரணம் துண்டித்துவிட்டதை ஏற்றுக்கொள்ள முடியாமல், மனைவியின் 30-வது நாள் காரியத்தன்று அவருக்கு வீட்டில் சிலைவைத்து ஆறுதல் தேடி, வழிபட்டு வருகிறார்.